*மொபைல் இணைய இணைப்பின் வகைகள் (GPRS, E, 3G, H, H+, 4G என்பன பற்றிய அறிமுகம்)*
அதிநவீன தொழிநுட்பங்கள் நாளொரு ஜிகாஹெர்ட்சும் பொழுதொரு மேகாஹெர்ட்சுமாக வளர்ந்துவரும் காலப்பகுதியில் நாமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தொழிநுட்ப வேகம் நம் எல்லோரது நாளாந்த வேலைகளையும் கைப்பேசிக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அடுத்தது என்ன ? அடுத்தது என்ன ? என்கிற சிந்தனைகளில் கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சுங் போன்ற நிறுவனங்கள் தலையை பிய்க்காத குறையாக நவீன வசதிகளை அறிமுகம் செய்துகொண்டேயிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கைப்பேசி தொடர்பிலான வளர்ச்சிகள் ஆர்முடுகல் வேகத்தில் அசரவைத்துக்கொண்டிருக்கிறது. தற்காலத்தில் இணையத்தள பாவனையை மடிக்கணினிகளிலும், தனியார் கணினிகளிலும் பயன்படுத்துவதைக்காட்டிலும் கைப்பேசிகளில் அதிகமானோர் உலாவருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தகைய கைப்பேசிகளில் இணைய வேகம் என்பது முக்கியமான ஒரு அம்சமாக பயனாளர்களால் கருதப்படுகிறது.
இக்கட்டுரை என்னென்ன வகையான வலைப்பின்னல் இணைப்புக்கள் கைப்பேசியில் இணையத்தை பயன்படுத்தும்போது காணப்படுகின்றன என்பதை பயனாளர்களுக்கு தெளிவுபடுத்தும்.
இதன்மூலம் கைப்பேசி இணையப்பாவனையாளர்கள் வேகமான இணையஇணைப்பை உத்தரவாதப்படுத்திகொள்ள உதவியாக அமையும்.
'2G'
2G வலையமைப்பு என்பது இணையத்தளத்தை GPRS (General Packet Radio service) எனப்படும் சேவையின் மூலம் இணைப்பதற்கான வலையமைப்பு வகை ஆகும். இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும். இது 2000 ம் ஆண்டுகளில் அதிக பாவனையில் இருந்தமையை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். இதன் மூலம் நீங்கள் 1GB dataவை தரவிறக்கம் செய்ய165 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப அதே 165 மணி நேரமும் அண்ணளவாக தேவைப்படும்.
'E'
இதுவும் 2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) கைப்பேசி இணையம் ஆகும்.
2008 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் மூலம் நாம் 1GB dataவை தரவிறக்கம் செய்ய 44 மணி நேரமும், 1GB dataவை அனுப்ப 89 மணி நேரமும் ஆகும்..
உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “E” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள்2G (2.5G) EDGE (Enhanced Data access for GSM Evaluation) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
'3G'
2G தொழினுட்பத்தின் குறைகளையும் நிவர்த்தி செய்யவும், வேகமான இணைய இணைப்பை பாவனையாளர்களுக்கு வழங்கவும் இந்த 3G கைப்பேசி இணையம் UMTS (Universal Mobile Telecom System) அறிமுகம் செய்யப்பட்டது. இது இயங்க 3G இயங்குதள வசதியுடைய கைப்பேசி (Smart Phone) அவசியமாகும்.. இதன் மூலம் நாம் 1GB
dataவை 6 மணி நேரத்தில் தரவிறக்கமும், அதே 1GB dataவை 18 மணி நேரத்தில் அனுப்பவும் இயலும். உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “3G” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் 3G UMTS (Universal Mobile Telecom System) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
'H’
இது 3G மொபைல் இண்டர்நெட்டின் மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். HSPA (High Speed Packet Aceess) என இது அழைக்கப்படுகிறது..
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும். உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “H” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் HSPA (High Speed Packet Aceess) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
இதை Smart Phoneகளின் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாம் 1GB dataவை 25 நிமிட நேரத்தில் டவுன்லோடும், அதே 1GB dataவை 45 நிமிட நேரத்தில் அனுப்பவும் இயலும். உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “H” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் HSPA (High Speed Packet Aceess) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
'H+'
இதுவும் 3G மொபைல் இணையத்தின் ஒரு வடிவமாகும். EHSPA (Evolved High Speed Packet Access) என இது அழைக்கப்படுகிறது.. இது இயங்க 3G இயங்குதள வசதியுடைய கைப்பேசி (Smart Phone) அவசியமாகும். இதன் மூலம் நாம் 1GB dataவை 5 முதல் 20 நிமிடங்களில் தரவிறக்கம் செய்யவும், 1GB data வை 15 முதல் 39 நிமிட நேரத்தில் அனுப்பவும் முடியும்.
உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “H+” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் EHSPA (Evolved High Speed Packet Access)இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
'4G'
இச்சேவை 4G network internet - LTE (Long Term Evolution) இலங்கையின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றது. இதன் வேகம் மிகவும் அதிகம். இதை இயங்க அவசியம் 3G இயங்குதள மொபைல் (SmartPhone) தேவை. இதன் மூலம் நாம் 1GB dataவை 3 நிமிடத்தில் தரவிறக்கவும். அதே 1GB dataவை அனுப்ப 5 நிமிடம் மட்டுமே போதும். இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை முழுவமும் இச்சேவையை இனைய சேவை வழங்குனர்கள் (Internet Service Providers) அறிமுகம் செய்வர் என எதிர்பார்க்கலாம்.
உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “4G” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் LTE (Long Term Evolution) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
உங்கள் கைப்பேசி இணைய இணைப்பில் இருக்கும்போது “4G” என்னும் குறியீடு தென்படுமாயின் நீங்கள் LTE (Long Term Evolution) இணைப்பில் இணையத்தை உலாவருகிறீர்கள் என்று பொருள்.
மேற்குறிப்பிடப்பட்ட இணைய இணைப்புக்கள் தவிர 5G, 6G, 7G ஆகிய நவீன தொழிநுட்பங்களின் உருவாக்கம் தொடர்பான ஆய்வுகளை தொழிநுட்ப நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. இவ்வாண்டு இறுதிக்குள் 5G வலையமைப்பு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இத்தொழிநுட்பங்கள் நாளுக்குநாள் மேம்பட்டுக்கொண்டிருப்பது பாவனையாளர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
Ahamed sajeeth
south eastern university of sri lanka
Useful nots. Execellent
ReplyDeletethanks a lot
DeleteUseful informations.. thanks a lot
ReplyDeleteUseful informations.. thanks a lot
ReplyDelete