Monday 15 April 2019

What’sapp அறிமுகப்படுத்தியுள்ள நல்லதொரு புதிய விடயம் !


What’sapp அறிமுகப்படுத்தியுள்ள நல்லதொரு புதிய விடயம் !

வாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இணைக்க முடியாதவகையில் அந்நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
வாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் பயன்படுத்து மெசஜ்சராக வலம்வந்து கொண்டிருக்கின்றது.

இது வரை இந்த ஆப்பில் குரூப்புகளில் ஒருவரை இணைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. எனவே பலரது அனுமதியில்லமல் தவறான முறையில் குரூப்பகளில் இணைப்பது குறித்து பல புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது.


இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் கொண்டு வந்துள்ள அப்டேட்டில், ஒருவரின் அனுமதியில்லாமல் அவரை குழுவில் இணைக்க இயலாது.
அதற்கு பயனாளர்கள் தங்களின் ஸ்மார் போனில் account – privacy- groups- அதில் “nobody” “my contacts” “every one” இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் அதன்படி உங்கள் account active-ல் இருக்கும்.
மேலும் தெரியாத நபர் உங்களை குரூப்பில் இணைக்க முற்பட்டால் அதற்கான அனுமதி கோரி மூன்றுநாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.   

                  *வட்ஸ்அப்பில் வந்துள்ள புதிய கட்டுப்பாடு!!* 




   போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் தமது சேவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள ‘வட்ஸ்அப்’ நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைய ஒரு செய்தியை ஐந்து முறை மட்டுமே ஒரு உறுப்பினரால் பகிர்ந்து கொள்ள முடியும்.

முன்னர் அங்கத்தவர்களினால் 20 முறைகள் ஒரே செய்தியை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது.



இந்த புதிய நடைமுறையின் மூலம் பிழையான தகவல்கள் வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுமார் 6 மாத கால ஆய்வின் பின்னரே நிறுவனம் இந்த முறைமையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முறைமையினை பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான ‘வட்சப்;’ ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் இந்த முறைமை சிறந்த பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
                     
                                  5G நகரம்



             உலகில் முதன் முறையாக 5G வலைப்பின்னல் அறிமுகம்
உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) (05.4.19) அறிமுகம் செய்தது...
இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.
இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .          

  
    *Ahamed sajeeth*         
  

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts