Sunday 2 June 2019

புதிய முயற்சியில் uber

புதிய முயற்சியில் uber

வாடகை போக்குவரத்துத் துறையில் ஊபர் நிறுவனம் புதிய அறிமுகங்களை செய்து வரும் நிலையில் முதன் முறையாக கடலுக்குள் சுற்றுலா செல்லும் வாகனத்தை பரிசோதனை முறையில் இயக்கி வெற்றி கண்டுள்ளது.  



ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலுள்ள Great Barrier Reef எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கடலுக்குள் சென்று காணும் வகையில் வாகனம் ஒன்றை ஊபர் நிறுவனம் வடிவமைத்துள்ளது. எஸ்சி ஊபர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி வாகனம் இருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 கடலுக்குள் சுமார் 20 மீட்டர் ஆழம் வரை செல்லும் அந்த வாகனத்தில் செல்ல நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது  . இதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.  விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts