5G ஸ்மார்ட் போனை விவோ அறிமுகம் செய்கிறது.
தற்போது விவோ நிறுவனமானது தனது 5ஜி ஸ்மார்ட் போனின் வெளியீட்டு விபரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவானது (MWC2019) சாங்காய் நகரில் 2019 ஜூன் மாத கடைசியில் 26 திகதி முதல் 29 திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த விழாவில் தான் விவோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இத்துடன் விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. விவோவின் அபெக்ஸ் 2019 கான்செப்ட் போன் நாட்ச் , பஞ்ச் ஹோல் போன்ற வடிவமைப்பு இல்லாமல் புல்ஸ்கிரீன் டிஸ்பிளே அம்சத்தை கொண்டிருக்கின்றது.
புகைப்படங்களை துல்லியமாக எடுக்க பின்புறம் டுயல் கெமரா பொருத்தப்படவுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தமட்டில் அபெக்ஸ் 2019 மொடலில் 5ஜி சப்போர்ட் வழங்கப்பட்டுகின்றது.
இதற்கென குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப் டிராகன் எக்ஸ் 50ஜி மொடல் வழங்கப்படுகின்றது. இத்துடன் ஸ்னாப் டிராகன் 855 பிராசசர் 256 ஜிபி மெமரி ,12 ஜிபி ராம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த சாதனத்தில் 4000 எம்எஎச் பற்றரியை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பற்றரியில் 2.38 சதவீத சார்ஜ் செய்ய 14 நொடிகளே ஆகும் என்றும் செல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment