Monday 15 July 2019

என்ன இந்த CAPTCHA ?

என்ன இந்த  CAPTCHA ?

இணைய தளங்களைப் பார்வையிடும் போது நாம் அடிக்கடி காணும் விடயங்களில் கேப்ச்சா Captcha  சாதனையும் அடங்கும்.
ஒரு ஒன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும் போதோ அல்லது ஒரு படிவத்தை நிரப்பும் போதோ captacha  (world verification; ) சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று பலரும் அறிந்திருப்பதில்லை.



கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது தரவு உள்ளீடு செய்வது தானியங்கி கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்ய பயன்படும் ஒரு செய்நிரலாகும். கேப்ச்சா சோதனைகளில் படமொன்றைக் ( image )  காண்பித்து அதிலுள்ள எழுத்துக்களை உள்ளீடு செய்யுமாறு பயனர் கேட்கப்படுகிறார்.

அப்படத்தில் காண்பிக்கப்படும் CAPTACHA Code எனும் ஆங்கில எழுத்துக்கள் வழமையான வடிவத்தில் இல்லாமல் சிதைத்த வடிவில்  (distorted text ) காணப்படும்.   எழுத்துக்கள் சரியாகவும் அலைவடிவிலும் இருக்கும்.
சிலவேளை எழுத்துக்களூடாக கோடுகளும் செல்வதை காணலாம். இவ்வாறான எழுத்துக்களை மனிதக் கண்களால் மட்டுமே கண்டறிய முடியும். என்பதுடன் ஒரு தானியங்கி கணினி செய்நிரலால் (bot) அவற்றைக் கண்டறிவது சாத்தியமற்றது. சில கேப்ட்ச்சாக்கள் மனிதர்களால் கூட அடையாளம் காண முடியாத படி சிதைந்து இருக்கும் .



அதிஷ்டவசமாக சில கேப்ட்ச்சா சோதனைகளில் எழுத்துக்களை கண்டறிய மிகவும் கடினமாக இருந்தால் மீண்டும் வேறொரு படத்தை உருவாக்க சில தளங்கள் பயனரை அனுமதிக்கின்றன. சிலவற்றில் செவிவழி உச்சரிப்பு (audio captacha ) அம்சமும் அடங்கும்.  கேப்ட்சா மூலம்  போட்ஸ் bots எனப்படும் சிறிய தானியங்கி நிரல்களால் ஒன்லைனில் படிவங்களை நிரப்புவதைத் தடுக்கப்படுவதோடு வலைத்தள படிவங்கள் மூலம் ஸ்பேம் போன்ற தேவயற்ற குப்பை அஞ்சல்கள் அனுப்பப்படுவது தடுக்கப்படுகிறது. 

சில இணையத்தளங்களில் பயனந்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை தடுக்கும் நோக்கிலும் கேப்ட்ச்சாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் AI ( Artificial  intelligence )எனும் செயற்கை நுண்ணறிவு மற்ற எழுத்து வடிவங்களைக் கண்டறியும் OCR (Optical  Character Recognition ) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இப்போது இந்த கேப்ட்ச்சாக்களைக் கண்டறிவதும் bots  எனும் செய்நிரல்களுக்கு கடினமான செயலாக தெரிவதில்லை.



இதன் காரணமாக கேப்ச்சா தொழில் நுட்பத்திலும் பல்வேறு மேம்பட்ட உத்திகளைக் கையாள்கிறார்கள். சில படங்களை காண்பித்து அப் படங்கள் சார்ந்த ஒரு கேள்வியை பயனரிடம் கேட்பதும் அவற்றில் ஓர் உக்தியாகும்.
கூகுள் நிறுவனமும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கேப்ச்சா தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது."நோ  கேப்ட்சா ரீகேப்ட்ச்சா"
NO CAPTACHA reCAPTACHA எனும் பெயர் கொண்ட இத்தொழில் நுட்பம் கேப்ட்சா சவால்களை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கு படங்கள்,  எழுத்துருக்கள் மற்றும் ஓடியோ எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக பயனரின் சுட்டி (Mouse ) நகரும் முறையில் கவனம் செலுத்தப்படுகிறது. 



கேப்ட்சாக்கள் பயனருக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் தானியங்கு நிரல்களைத் தடுப்பதன் மூலம் இணையத்தளங்களை நிர்வகிக்கும் வெப்மாஸ்டர்  எனப்படுவோருக்கு மிகுந்த பயனை அளிக்கின்றன.
தானியங்கி செய்நிரல் மூலம் சுட்டியை நகர்த்தும் போது அது சீராக நேர்கோட்டிலேயே நகரும். எனினும் நாம் அதனை நகர்த்தும் போது ஒழுங்கற்ற முறையிலேயே  நகரும் என்பது நீங்கள் அறிந்ததே .
இங்கு சுட்டி நகரும் விதத்தை அவதானித்து சுட்டியை இயக்குவது தானியங்கி செய்நிரலலா இல்லை மனிதரா என்பது கேப்ட்சாவினால் தீர்மானிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts