கூகுள் கலண்டரில் Dark Mode வசதி
பயனர்களின் கண் பார்வைக்கு சௌகரியமாக இருக்கக்கூடிய வகையில் பல செயலிகள் மறறும் இணையத்தளங்களில் Dark mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. கூகுள் நிறுவனமும் தனது சில செயலிகளிலும் , குரோம் உலாவியிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் கலண்டர் செயலிலும் குறித்த Dark mode வசதியினை தற்போது வழங்கியுள்ளது. இதனை செயற்படுத்துவதற்கு கலண்டர் அப்ளிக்கேஷனை திறந்து settings பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் General Theme எனும் பகுதியில் தரப்பட்டுள்ள Dark mode இனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது Dark mode வசதி செயற்பட ஆரம்பித்து விடும். மீண்டும் தேவைப்படின் இதே படிமுறையில் Light mode வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

