Sunday, 2 December 2018

வலையமைப்பு (networking )என்றால் என்ன?

கணினி வலையமைப்பு

கணினி வலையமைப்பு  (computer network ) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு அமைப்பு. கணினி வலையமைப்பை நிரந்தரமானது  (வலையமைப்பு கம்பி இணைப்புகள் ) அல்லது தற்காலிகமானது  ( மோடம் இணைப்புகள் ) என்று மேலோட்டமாக இரு வகையாக பிரிக்கலாம். வலையமைப்புக்களை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம்.  கீழே இந்த பிரிவுகளை காணலாம்.






வலையமைப்பு வகைகள் வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி

1. தனிநபர் பரப்பு வலையமைப்புக்கள் (personal Area Networks or PAN)    
2.  குறும்பரப்பு  பரப்பு வலையமைப்புக்கள்(Local Area Networks or LAN)   
3 .பெரும் பரப்பு வலையமைப்புக்கள்  (  Wide Area Networks or WAN)             
4. பெருநகர் பரப்பு வலையமைப்புக்கள் ( Metropolitan Area Networks  or MAN)

வலையமைப்பின் செயல்தன்மைப் படி

1.  வாடிக்கையாளர் சேவையகம் (Client Server)
2. பல அடுக்குக் கட்டமைப்பு  (Multitier architecture ) 

வலையமைப்பு     இணைப்பு முறைப்படி 
          
1. பாட்டை வலையமைப்பு ( Bus Network) 
2. விண்மீன் வலையமைப்பு (Star  Network) 
3. வளைய வலையமைப்பு (Ring Network) 
4. கண்ணி வலையமைப்பு  (Mesh Network)
5.  விண்மீன் - பாட்டை வலையமைப்பு  (Starbus Network)        

வலையமைப்பின் சிறப்பு தன்மையின் படி

1. தேக்கக வலையமைப்பு  ( Storage Network) 
2. சேவையகப் பண்ணைகள் (Server Farms)
3. செயல் கட்டுப்பாட்டு வலையமைப்பு  ( Process Control Network)
4. மதிப்புக் கூட்டும் வலையமைப்பு (Value Added Network  )
5. சிறு மற்றும் வீட்டில் இயங்கும் அலுவலக வலையமைப்பு  ( SOHO Network)
6. கம்பியில்லா சமூக வலையமைப்பு ( Wireless Community Network) 





  இணைப்பு  நெறிமுறை அடுக்குகள் கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு ( protocol stack ) , கட்டமைப்புக்களும் , ஊடகங்களும்  (media ) நடப்பில் உள்ளன.  ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும் , நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல்படச் செய்து வடிவமைக்கலாம் .

 உதாரணத்திற்கு  சில  :
  ஆர் நெட்  ( Arc - net) , டெக்நெட் (Decnet) , ஈதர்நெட் (ethernet) , இண்டர்நெட் நெறிமுறை ( Internet Protocol or IP) ,போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நெறிமுறை  Transport Control Protocol orTC),   பயனர்  Datagram நெறிமுறை (User Datagram Protocol or UDP ) ,  திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்  (OSI Model ) , பலவகை இயக்க மென்பொருள் அமைப்புக்களும்        ( Operating system ) ,   வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புக்களும்  ( networking hardware )   நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி கணினி உலகில் கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்புப் பெறும் முறை,  அக் கணினியின் வன்பொருள் அமைப்பு,  அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளத் தேவை இல்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  இந்த படிமத்தின் முக்கிய நோக்கங்கள்: ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ள தேவையான அனைத்து செயல்களையும்  (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது.  அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப்படுத்தி தொகுப்பது. ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயற்பாடுகளும் சக கணியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப்படி தரவு பரிமாற்றம்  செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள்,  செயல்பாடுகளை அமைப்பது .




அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது இந்தஇந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன :

1.   பயன்முறைக் கட்டம் ( Application Layer 7 )
2.   தரவுக் குறிப்பிட்டுக் கட்டம் ( presentation Layer 6) 
3.  அமர்வுக் கட்டம்  ( Session Layer 5) 
4.  போக்குவரத்துக் கட்டம்  ( Transport Layer 4) 
5.  வலையமைப்புக் கட்டம்  ( Network Layer 3) 
மடை மாற்றல் ( Switching ) , பாதை தெரிவுசெய்தல் (Routing )

6.  தரவு இணைப்புக் கட்டம் (Data Link Layer 2) 
7.  பருநிலைக்கட்டம் ( Physical Layer 1)



2 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. வலையமைப்பாதல் எனபது யாது

    ReplyDelete

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts