FaceApp மூலம் தகவல்கள் திருடப்படும் அபாயம்.
சமூக இணையத்தளங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள (faceApp) என்ற செயலி மோகத்தின் காரணமாக அதனை பயன்படுத்துவோரின் தரவுகள் காணாமல் ஆக்கப்படுவதாக தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இணையத்தளங்களில் ( Age challenge )என்பது காட்டுத்தீ போல் பரவி வருவதுடன் ஒவ்வொருவரும் இதற்குள் உள்வாங்கப்படுகின்றனர்.
இந்த செயலி பலரையும் கவர்ந்திருப்பதை அடுத்து இதனை பயன்படுத்துவோரின் இரகசிய தரவுகளை பாதுகாத்து பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தன்மையை உறுதிசெய்வதற்கு செயலியை தயாரித்தவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்திருப்பதாக தகவல் தொழில் நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
விசேடமாக உங்களது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படஙகளையும் இந்த செயலியை தயாரித்த நபரிடம் தரவேற்றம் செய்வது தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி தொடர்பாக பிரச்சினைகள் அனைத்தும் ஏற்பட்டமை இதனை தயாரிப்பதில் ஈடுபட்ட நபரைப் போன்று இதனை பயன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் செய்தியினூடாக டுவிட்டர் பயனாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆகும். இதனை தயாரித்த சிலர் தனிப்பட்ட கொள்கைகளுக்கு அப்பால் இதனை பயன்படுத்தும் பயனாளிகளினால் தரவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது தொடர்பான தகவலை குறிப்பிடுவதற்கும் தவறியுள்ளதாக தகவல் தொழில் நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உங்களுடைய தனிப்பட்ட தன்மையை பாதுகாப்பதற்கு இவ்வாறான செயலியின் அலையை பயனுபடுத்த வேண்டாம் என்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment