Saturday 10 November 2018

What is BIOS?

                       பயோஸ் என்றால் என்ன ?


பயோஸ் ( BIOS) என்பது "Basic input / output System " (அடிப்படை உள்ளீடு / வெளியீடு முறைமை ) என்பதன் கருத்தாகும். சாதாரண கணினி பயனர்கள் பயோஸ் பற்றி கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும்  அவனைப்பற்றி ஓரளவு அறிந்திருப்பது சில வேளைகளில் உதவியாக இருக்கும்.     பயோஸ் ஆனது விண்டோஸ் அடிப்படையிலான கணினிகளில் , கணினியை பயன்படுத்த  ஆரம்பிப்பதற்கு முன்பே இயங்கும் ஒரு செய்நிரலாகும்.



   இயங்குதளத்தை (Operating system )   நினைவகத்தில் ஏற்படுவதற்கு முன்னர் CPU பயோஸையே முதலில் அணுகும். பயோஸானது நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச்சாதனஙகள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளும். அனைத்தும் ஒழுங்காக இருந்தால்,  இயக்க முறைமையை கணினி நினைவகத்தில் ஏற்றி விட்டு பூட்டிங் செயற்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும்.  

   பயோஸ் செய்நிரலானது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில்  சேமிக்கப்பட்டிருக்கும். இயங்கும் தளம் கணினிக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்குமான  ஓர் இடை முகப்பை வழங்குகிறது.   அதேவேளை பயோஸானது CPU மறறும்  Input / Output ( உள்ளீடு / வெளியீடு ) சாதனங்களுக்கிடையே ஒரு இடைத்தரகராக செயல்படுகிறது. கணினியை on செய்ததும் கணினியை கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்த வைக்கிறது பயோஸ்.



 பயோஸ் செய்நிரலானது கணினியிலுள்ள ஹார்ட் டிஸ்கை நிர்வாகிப்பதனால், அது ஹார்ட் டிஸ்கில் நிறுவப்படமாட்டாது. அத்தோடு இயங்குதளம் ஆரம்பிப்பதற்கு முன்பே பயோஸ் இயங்க ஆரம்பிப்பதனால் அது நினைவகத்திலும் (Ram) தயங்குவதில்லை  அப்படியானால் இந்த பயோஸ் நிரல் எங்கே இருக்கிறது?  உண்மையில் இந்த பயோஸ் ப்ரோகிராமானது கணினி மதர்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம்  (Rom - Read Only Memory) எனும் நினைவக (Chip)   சிப்பில்  சேமிக்கப்பட்டிருக்கும். மேலும் இது EPROM  எனும் அழிதகு (Erasable programme read - only memory ) சிப்பிலேயே பதியப்பட்ட ள்ளது. கணினி இயக்கத்தை ஆரம்பிக்கும் போது, CPU  ஆனது EPROM  சிப்பை அணுகி அங்கிருக்கும் பயோஸிற்குக் கட்டுப்பாட்டை  வழங்குகிறது.கணினியில் பயோஸிற்கு பல கணினிகள் வழங்கப்பட்டிருதாலும் இயங்குதளத்தை ஆரம்பித்து வைப்பதே அதன் முக்கிய பணியாகும். 

    
கணினியை இயக்கியதும் பயோஸ் CPU விற்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன் பொருள்களும் முறையாக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளும் .இது Poverty Only Self Test  (POST) எனப்படுகிறது.  ஹாட் டிஸ்க், சீடிரொம் போன்றவற்றை இனம் காணுதல் , நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்ஸ் போன்றவற்றை நிர்வாகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics card ), சவுண்ட் காட் (Sound Card) , போனற ஏனைய சாதனங்களில் பொருத்தப்பட்டிருக்கும்  இது போன்ற வேறு பயோஸ் சிப்புக்களை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன. 

கணினியை இயக்கியதும் ஆரம்பிக்கும் பயோஸ் ப்ரோகிராமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோதிப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிர்வாகித்தல் (Power management ), மற்றும் எந்த  ட்ரைவிலிருந்து இயங்குதளத்தை ஆரம்பிப்பது  (Boot Sequence ) என்பதை தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி , நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்தியில் இயங்கும் ஒருநினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS )சிமோஸ் எனப்படுகிறது. Bios (Basic input /output System )என்பதும் CMOS ( Complementary metal Oxide Semiconductor ) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். இவற்றுக்கிடையே தொடர்புகள் இருந்தாலும் இரண்டும் வேறுபட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



 பயோஸ்  என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி , நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சிமோசில் மாற்றங்கள் செய்ய கணினியை on செய்தவுடனேயே கீபோர்டில்   குறித்த ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்ததுமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும்.சிமோஸ் செட்டபில் நுழைந்துமே CMOS கணினி பயனருக்குப் பல  தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. திகதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence ), பாஸ்வார்ட் செட்டிங் , நினைவக செட்டிங், மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்றியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.




 பயோஸ் ப்ரோகிராமை அவ்வப்போது புதுப்பிக்கவும் (update ) முடியும்.  புதிதாக தயாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காணவேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின்  இணைய தளத்திலிருந்து அதன் புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும் .எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை . 


தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது . எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிலுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது . 1990  ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் மூலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது  EEPROM (Electrically Erasable programmable Read - only memory )  நினைவக சிப்பிலேயே சேமிக்கப்படுவதால் ரொம் சிப்பை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோஸ் அப்டேட் செய்துகொள்ளலாம்.

By : Ahamed Sajeeth
 South Eastern University Of Sri Lanka



1 comment:

  1. உங்கள் பணி தொடரட்டும்....
    இப்படியான தகவல்கள் ஆங்கித்திலே தான் அதிகம் உள்ளன. தமிழினால் பதிவிட்டதற்கு நன்றி..

    ReplyDelete

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts