Cyber Crime என்றால் என்ன ?
*இணைய குற்றங்கள், கணினி வழிக்குற்றங்கள்*
இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், இங்கு பார்ப்போம்.
*இணைய குற்றங்கள் (Cyber crimes )*
1. ஸ்பாம் ( spam ) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். (மின்னஞ்சல்கள்)
2. கிரெடிட் கார்ட் , டெபிட்கார்ட் மூலம் இணையத்தில் பணப் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது , கடவுச்சொல் உட்பட கணக்கு விவரங்களை திருடுவது .
3. பாலியல் ரீதியான தொல்லைகள். சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புக்கள். அது மட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனை கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதைப்பொருள் விற்பனை.
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.
5. இணையத்தளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவானான திகழும் சோனி ( Sony ) யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது .

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. ஒன்று மட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருப்பது வயதுக்குட்பட்டவர்களா? இல்லையா? என்று சிறுவர்களும் ஆம் என்பதை கிளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால் சிகரட் பக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல் தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.
7. இவற்றை விட கொடியது , குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நலமுடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர் , சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு (Chatting ) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி , பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கினறனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
*பாதுகாப்பு வழிகள்.*
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண் , வீட்டு முகவரி , பள்ளி முகவரி, போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலாவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறுது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாததே காரணம்.
5 . உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களைக் கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளங்களை மூடினால் உடனே கவனிக்கவும்.
6 . அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
6 . அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7 .நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக்கூடும் என்பதை மறவாதீர்கள்.
8 . அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்தது அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்து கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டடு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக பேஸ்புக்கில்.
10 . குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password ஐ பெற்றோர்களைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http:// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கெடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https:// என்பது பாதுகாப்பான வழியாகும் .
13. காதலன் என்றாலும் உங்களை படம் பிடிப்பதை அனுமதிக்காதீர்கள். பிரச்சினை பெரிதானால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

No comments:
Post a Comment