பென் டிரைவ் ஒன்றை கணினியில் செருகும் போது பென் டிரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப் பென் டி ரைவைத் திறந்து பார்க்கும் போது அதிலிருந்து சில கோப்புக்களை சில வேளைகளில் காண்பிக்காது.
அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்து விட்டதோ என நீங்கள் நினைக்கலாம்.
இது வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு பாதிப்புத்தான் என்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தக் கோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் டிரைவில் கோப்புக்கள் மறைத்து வைக்கப்படும் .அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண்டு வழிகளில் மறுபடி தோன்றச் செய்யலாம்.