Monday, 10 December 2018

கணினியின் வேகத்தை அதிகரிப்பது எவ்வாறு?


இப்பொதானே  வாங்கினேன் என்று நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். உண்மையில் அதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு , கணினி கடைகள் பழைய கணினிகளைக் கொடுத்து விட்டுப் புதிய கணினிகளை தள்ளுபடி விலையில் விற்றபோது ( அல்லது அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ) அதை நீங்கள் வாங்கியிருப்பீர்கள்.  ஏன் இந்தக் கணினியின் பல்வேறு ப்ரோகிராம்களை திறக்க இவ்வளவு நேரமாகிறது. என்று நீங்கள் உங்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்ளுமளவுக்கு அலுப்புடன் உங்களையே கேட்டுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல நேரிட்டிருக்கும். நீங்கள் தகவல் தொழில் நுட்ப வல்லுநர் இல்லை,  தினசரி சட்டையை மாற்றுவது போல கணினியை புதிது புதிதாக மாற்றிக்கொண்டிருக்க முடியாது என்ற நிலையில் உங்கள் கணினியைப் பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இதோ;





கணினிகளைப் பற்றிய அறிவு உங்களுக்கு எந்தளவு இருந்தாலும் பிரச்சினை இல்லை. புதிய கணினி வாங்க முடிவு செய்யும் முன் வைத்திருக்கும் கணினியை சரி செய்ய முயலுங்கள்.  

   1.  கணினி வன் தட்டில்[ Hard disk ல் ] ஏற்பட்ட தகவல் விரிசல்களை ஒட்டுவது. (Defragmentation) இதன் அர்த்தம் என்ன என்று கூட தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இது கணினியை பராமரிப்பதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.கணினியிலுள்ள கோப்புககளுக்கிடையே இருக்கும் தகவல்களை உங்கள் கணினி படித்து
பயணம் செய்யும் வேகத்தை இந்த 'தகவல் விரிசல்களை ஒட்டும்' வேலை விரைவு படுத்தப்படுகின்றது. 

தகவல்களை ஒழுங்காக அடுக்குவதன் மூலம் அதை கணினி செய்கிறது.   புதிதாக வாங்கிய நவீன வன் தட்டுக்கள் கூட காலம் செல்லச்செல்ல மந்தமடைகின்றன. இதற்கு காரணம் கோப்புக்கள் கணினியில் சேமிக்க படும் முறைதான்.இந்த வன்தட்டுப் புதிய கோப்புகளை எழுதவும், கழிக்கவும் செய்யும் போது, அந்த கோப்புகள் துண்டு துண்டாக வன்தட்டின் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்படுகின்றன. எல்லா தரவுகளும் ஒன்றாக வைக்கப்படுவில்லை. இது கோப்புக்களை நாம் அணுகுவதை மேலும் சிக்கலாக்குகிறது. எனவே உங்கள் கணினியின் வன்தட்டெங்கும் தகவல்கள் கொத்துக் கொத்தாக பரவிக் கிடப்பதை ஒழுங்கு செய்வதன் மூலம் கணினியில் காலியாக இருக்கும் இடத்தை [ கணினியில் நினைவுக் கொள்திறன்  memory capacity என்ற அளவில்  ] உங்களால் அதிகரித்துக் கொள்ள முடியும்.



மேலும் தகவலை அணுகுவதையும் இது எளிதாக்கும்.
இதை செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமானது அல்ல. இதைச் செய்யவென்றே உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன.ஸ்மார்ட் டிப்ராக் 3 . [மைக்ரோசொப்ற் விண்டோஸ் 8. 1  கணினிகளுக்கு ] மற்றும் ஐடிப்ராக் [ ஆப்பிள் ஓ.எஸ். எக்ஸ் கணினிகளுக்கு ] தேவையற்ற கோப்புகளை கணினியிலிருந்து அழியுங்கள்.



2.  தேவையற்ற கோப்புகளை அழித்தல் இப்போதெல்லாம் 200 GB  இற்குக் குறைவான அளவுள்ள கணினியின் வன்தட்டை எளிதில் நிரப்பி விட முடியும்.ஒரு வன்தட்டு நிரம்ப நிரம்ப அந்த கணினி எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்க கஷ்டப்படும்.    உங்கள் கணினியில் ஒருவேளை ஏராளமான,  நீங்கள் பயன்படுத்தாத பழைய கோப்புகள் இருக்கலாம். அவை உங்கள் கணினியில் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.எது அது மாதிரி பழைய தேவையற்ற கோப்பு என்பதை அறிந்து கொள்வது,  புதிய செயலி (app) ஒன்றை தரவிறக்கம் செய்வது போல எளிதான வேலைதான்.

சந்தையில் கணினிகளுக்காக [ பி.சி மற்றும் மேக் கணினி ஆகிய இரண்டுக்குமே ] பல்வேறு ப்ரோக்ராம்கள் இருக்கின்றன. பி.சி கணினிகளுக்கு ஸ்பேஸ் ஸ்னிஃப்ஃபர் (Space Sniffer) மற்றும்  விண்டிர்ஸ்டாட் ( Win DirStat) போன்ற ப்ரோகிராம்களை வைத்து உங்கள் வன் தட்டில் எந்த கோப்புக்கள் அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன என்பதைக்  கண்டறிய முடியும்.



உங்கள் கணினி ஓஎஸ் எக்ஸ் உலவியில் இயங்கும் மேக்கிண்டோஸ் கணினியாக இருந்தால் இதை செயவது இன்னும் எளிது. ஃபைணடர்( finder ) என்ற தேடல் வசதியைப் பயன்படுத்தி இதைச்செய்யலாம். இது நீங்கள் உங்கள்  மேக் கணினியில் எல்லாக் கோப்புகளையும் நேரடியாக்ப் பார்த்து அழிக்க உதவும். செயலிகள், நிரல்கள், வன்தட்டுக்கள், கோப்புகள் ,டிவிடி ட்ரைவ்கள் போன்றவை உட்பட நீங்கள் உங்கள் கோப்புகள் மற்றும் போல்டர்களை( folder ) இங்கிருந்தே ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மேக் கம்ப்புயூட்டரில் எங்கு வேணடுமானாலும் தேடிப்பார்த்து உங்களுக்கு வேண்டாத எந்த விஷயத்தையும் அழித்துவிடலாம்.

1 comment:

  1. சிறந்த தகவல். நன்றி.

    ReplyDelete

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts