Tuesday, 28 May 2019

ஜிமெயில் - கூகுள் கணக்கு கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா?

ஜிமெயில் - கூகுள்
கணக்கு கடவுச் சொல்லை மறந்து விட்டீர்களா?



கூகுள் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில் பாஸ்வேர்ட் மறந்து போகும் நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகி விடும்.  இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் கணக்கை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலைமை மேலும் மோசமாகி விடும். சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர். எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை.  இவ்வாறு ஆகும் போது  புது பாஸ்வேர்டை பெறுவது எப்படி?



1 . கூகுள் லொக் -  இன் பக்கத்திற்கு சென்று " forgot password ? "  ஒப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.    நீங்கள் இறுதியாக நினைவில் வைத்திருக்கும் பாஸ்வேர்டினை பதிவு செய்ய வேண்டும்.  எந்த பாஸ்வேர்டும் நினைவில் இல்லாத பட்சத்தில்" try another way " ஒப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி கூகுள் உங்களுக்கு வெரிஃபிகேஷன் நோடிஃபிகேஸனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்மாட்போனுக்கு அனுப்பலாமா என கேட்கும்.
உங்களது மொபைல் நம்பர் உங்களிடம் இல்லாத பட்சத்தில் கூகுள் உங்களுக்கான வெரிஃபிகேஷன் கோடினை மாற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்.  மாற்று மின்னஞ்சல் முகவரி இல்லாத பட்சத்தில் "try another way " ஒப்ஷனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும். இனி கூகுள் உங்களை தொடர்பு கொள்ள ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கேட்கும். இதை கொடுத்ததும், உஙகளுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை அனுப்பும்.
உங்களுக்கான வெரிஃபிகேஷன் குறியீட்டை பெற்றதும் கூகுளின் டயலொக் பெட்டியில் பதிவு செய்ய வேண்டும்.


இவ்வாறு செய்ததும் நீங்கள் ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுண்டை இயக்க முடியும். பாஸ்வேர்டை மாற்றியதும் புது பாஸ்வேர்டை வேறு எங்கேனும் பதிவு செய்து கொள்வது நல்லது. இதற்கு மூன்றாம் தரப்பு செயலிகளான last pass உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். நீங்கள் க்ரோமில் எந்த சேவையை பயன்படுத்தினாலும் " save password " ஒப்ஷனை கிளிக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது கூகுள் உங்களது பாஸ்வேர்டை பதிவு செய்து கொண்டு  அடுத்த முறை லொக் இன் செய்யும் போது உங்களுக்கு நினைவூட்டும். அப்பிள் நிறுவனம் இதே போன்று " i Cloud Keychain " சேவையே வழங்குகிறது.

No comments:

Post a Comment

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts