வட்ஸ்அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் வசதி!
அதிகமானவர்களால் உவகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வரும் மெசென்ஜர் அப்ளிகேசனாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.
அதைப்போன்றே போலியான தகவல்கள் கலவரங்களை தூண்டக்கூடிய தகவல்கள் போன்றவையும் இந்த அப்ளிக்கேஷன் மூலமாகவே அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன.
எனவே இதனை தடுப்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் மாத்திரமின்றி இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக வட்ஸ்அப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதன் மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என இந்திய அரசு நம்புகின்றது. அதாவது ஃபிங்கர் பிரிண்ட் எனப்படும் புதிய வசதியினை புகுத்துவதன் மூலம் போலி தகவல்களை பரப்புபவர்களை மிக எளிதாக இனங்காண முடியும் என்று நம்புகின்றது.
இதன்படி ஒவ்வொரு பயனாளரும் ஃபிங்கர் பிரிண்ட் பயன்படுத்தியே தனது வட்ஸ்அப்பினுள் உள்நுழைய வேண்டும். அப்போது ஃபிங்கர் பிரிண்டிற்கு உரியவர்களின் தகவல்கள் வட்ஸ்அப் நிறுவனத்தினரிடம் சேகரிக்கப்பட்டு விடும்.
இந்த நிலையில் போலி தகவல்களை பரப்பும் பயனாளர்கள் பேக் ஐடி யில் இருந்தாலும் அவருடைய ஐடியை கொடுத்து ஃபிங்கர் பிரிண்ட் மூலமாக உண்மையான விபரங்களை திரட்ட முடியும்.
இருந்த போதிலும் இந்த வசதியை பெரும்பாலான பயனாளர்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment