மீண்டும் நெருக்கடியில் ஹுவாவி
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார போட்டி காரணமாக ஹுவாவி நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு அமெரிக்கா தடை விதுத்துள்மை தெரிந்ததே. இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஹுவாவி நிறுவனத்தின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கு ஜப்பான் மற்றும் பிரித்தானியா என்பன தடைவிதித்துள்ளன . எனவே அந் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படாது என தெரிகிறது.
No comments:
Post a Comment