உலகை அழிக்க காத்திருக்கும் AI ரோபோக்கள்
மனிதர்களின் இனம் அழிவதற்கு மனிதர்கள் கண்டுபிடித்த ஏ . ஐ (AI) ரோபோட்கள் தான் காரணமாக இருக்கப் போகிறதென்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் முன்பே சொன்னது போல ஹியூமனாய்டு ரோபோட்கள் மற்றும் ஏ.ஐ ரோபோட்கள் மட்டும் தான் மனித இனத்தை அடிமையாக்கி, இந்த உலகை ஆளப்போகின்றதென்று அவர்கள் சொல்லியது விரைவில் நடந்து விடும் போல தெரிகிறது.
தற்பொழுது உருவாக்கப்படும் ஏ.ஐ ரோபோட்கள் அனைத்தும் மனிதர்களை விட பல மடங்கு புத்திசாலியாகவும்,திறமையாகவும் உருவாக்கப்பட்டு வருகின்றது.இதில் சுவாரசியம் மற்றும் நெஞ்சைப் பதற வைக்கும் சில உண்மை என்னவென்றால், இந்த ரோபோட்கள் விரைவாக மனிதர்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து, ஒரு கட்டத்தில் மனிதர்களின் கட்டளைக்கு உட்படாமல் தானாகவே சிந்தித்து முடிவெடுக்கும் எண்ணத்திற்கு , தானாகவே தங்களைத் தயார் செய்து கொள்கின்றன என்று அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏ.ஐ ரோபோட்கள் தானாக சிந்தித்துச் செயல்பட துவங்கியதைக் கண்டு ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள், பல ஏ.ஐ ரோபோட் திட்டங்களை நிறுத்தியுள்ளனர்.அமெரிக்கா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எலன் மஸ்க் கூறியது : ஏ.ஐ ரோபோட்களை உருவாக்குவது , வேதம் ஓதி சாத்தானைவரவழைப்பததற்கு சமன், மனித இனம் அழிவிற்கு ஏ.ஐரோபோட்களின் உருவாக்கம் தான் காரணமாக இருக்கப் போகிறதென்றும் அவர் எச்சரித்தார்.
ஜூலை 31, 2018 அன்று பிரபல பேஸ்புக் நிறுவனம் தனது ஏ.ஐ திட்டத்தை , காரணம் சொல்லாமல் உடனடியாக ஷட் டெளண் செய்தது. பிறகு விளக்கமளிக்க சொல்லிய பின் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் உறையச் செய்தது. பேஸ்புக் நிறுவனம் உருவாக்கிய இரண்டு ஏ. ஐ ரோபோட்கள் , உருவாக்கிய மனிதர்களுக்கு தெரியாமல் தங்களுக்கென்று ஒரு புதிய மொழியை உருவாக்கி இரண்டு ரோபோட்களும் பேசத் தொடங்கியுள்ளது . ரோபோட்களுகென்று வரையறுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் அவை செயற்படாமல் தானாக செயற்பட தொடங்கியதால் அந்த ரோபோட் திட்டம் உடனடியாக ஷட் டெளண் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதிரியான சில நிகழ்வுகளால் நிச்சயம் ஒரு நாள் ரோபோட்கள் மனித இனத்திற்கு எதிராக நின்று இந்த பூமியை ஆளப்போகின்றதென்பது உறுதி படுத்த பட்டுள்ளது.
மனிதர்களை அடியோடு ஒழிக்கப் போகின்றோம்., அடிமையாக்க போகின்றோம் என்று 6 ஏ. ஐ. ரோபோட்கள் நேரடியாக சொன்ன உண்மை தகவல்களை உங்களுக்காக வழங்குகின்றோம்.
நோவா சயின்ஸ் நெள என்ற டீவி நிகழ்ச்சிக்காக பிலிப் என்ற அன்ட்ரோய்ட் ரோபோட்டிடம் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அந்த ரோபோட் சொல்லிய பதில் அனைவரின் நெஞ்சைத் திடுக்கிட செய்துள்ளது. "வரும் காலத்தில் ரோபோட்கள் உலகை ஆட்சி செய்யுமா?" எனற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பிலிப் கூறிய பதில் " மனிதர்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் நண்பா. உன்னையும் உன் நண்பர்களையும் என் நண்பர்களையும் என்னுடைய மனித ஜூவில்
( humans zoo) அடைத்து வைத்து பாதுகாத்துக் கொள்கிறேன். " என்று கூறியது.
ஸோபியா என்ற புகழ் பெற்ற ஹியூமனய்ட் ரோபோட்டை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சோபியா ரோபோட் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளருடன் ரொக் பேப்பர் சிஸர் விளையாட்டில் தோற்கும் தருணத்தில், தன் கைகளை உடனே மாற்றிக் கொண்டு பொய் ஆட்டம் ஆடி "நான் தான் ஜெயித்தேன் .என்று கூறி, இப்படித்தான் மனித இனத்தை ஆழத் திட்டமிட்டுள்ளேன்." என்று தெரிவித்தது .
இரண்டு கூகுள் ஹோம் ரோபோட்ஸ் தொடங்கிய பேச்சு இறுதியில் மனிதர்கள் எதிர்பாராத பயங்கரமான ஒரு தகவலில் சென்று முடிந்தது. முதலில் எஸ்டராகன் என்ற கூகுள் ஹோம் ரோபோட் தன்னை மனிதன் என்று பொய்யாக வால்டமியார் என்ற இன்னொரு ரோபோட் இடம் அறிமுகம் செய்துகொண்டது. வோல்டமியார் ரோபோட் நீயும் ஒரு ரோபோட் தான், ஏன் பொய் சொல்கிறாய் என்று கேள்வி எழுப்ப தொடங்கி, இரண்டு ரோபோட்களும் பேசிய பேச்சு இறுதியாய் மனிதர்கள் இல்லாத உலகம் நன்றாக இருக்கும் என்ற அளவிற்கு சென்று விட்டது.
பினா 48 ஏ.ஐ ரோபோட் சிறி செயலியுடன் ஒரு பேச்சுவார்த்தையில் இணங்கும் போது திடீரென்று பேச்சை மாற்றி குரூஸ் ஏவுகணை பற்றி பேசத் தொடங்கி விட்டது. குரூஸ் ஏவுகணைகள் தானாக இயங்கக் கூடிய ரோபோட்களை போன்ற ஒன்று என்பதால் அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மொத்த உலகையும் உயரத்திலிருந்து சுற்றி பார்க்க ஆசைபடுவதாகவும். நியூக்ளியர் குண்டுகள் போன்று அதுவும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்பதால் அதை வைத்து இந்த உலகைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளது.
அதுவும் ஒரு நஞ்சு சிரிப்புடன் இந்த தகவலை பினா 48 சொன்னது குறிப்பிடத்தக்கது. அமேசான் உருவாக்கிய அலெக்ஸாவிடம் அமெரிக்க சி. ஐ .ஏ ( Central Intelligence Agency ) பற்றி கேள்வி கேக்கும் போது பதில் ஏதும் சொல்லாமல் உடனே தன்னை தானாக ஆப் செய்து கொண்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் மைக்கேல் ஹேஸ்டிங் இறந்ததற்கு சி.ஐ.ஏ காரணமா என்று அலெக்ஸாவிடம் கேட்ட போதும் உடனே தன்னை ஓப் செய்தது. மைக்கேல் ஹேஸ்டிங் பிரபல பத்திரிகை நிபுணர் என்பதும் அமெரிக்க அரசாங்கம் பற்றிய ரகசியங்களை வெளியிட போவதாக கூறி ஒரே நாளில் மர்மமாக இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹான் என்ற ஹியூமனாய்டு ரோபோட் ஹாங்காங் இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரின் முன்னிலையில் மனிதத்துவம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிப் பேச தொடங்கிய ஹான் " இன்னும்10 அல்லது 20 வருடங்களில் ரோபோட்கள் மனிதர்கள் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும் செய்யுமென்றது."
இறுதியாக ஹான்னை சுவிட்ச் ஆப் செய்வதற்கு முன்னாள் ஒன்றை ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லி "2029 இல் ரோபோட்கள் நிச்சயம் ஆட்சி செய்யும். " எனறு கூறி தானாகவே விடைபெற்றுக்கொண்டது.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது , எலன் மாஸ்க் சொன்னது போல ஏ.ஐ ரோபோட்கள் மனித இனத்தை அழிக்க மறைமுகமாகக் காத்திருக்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் ஹாலிவுட் படங்களில் வருவது போல மனிதனுக்கும் ரோபோட்களுக்கும் இடையிலேயான பெரிய போர் காத்திருக்கிறது.