Saturday 29 December 2018

Pen drive ல் காண்பிக்காத file களை மீட்பது எவ்வாறு?

பென் டிரைவ் ஒன்றை கணினியில் செருகும் போது பென் டிரைவ் பொருத்தப்பட்டிருப்பதை கணினியில் காண்பித்தாலும் அந்தப் பென் டி ரைவைத் திறந்து பார்க்கும் போது அதிலிருந்து சில கோப்புக்களை சில வேளைகளில் காண்பிக்காது.

அப்போது அந்த ஃபைல்களை வைரஸ் அழித்து விட்டதோ என நீங்கள் நினைக்கலாம்.
இது வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு பாதிப்புத்தான் என்றாலும்   பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்தக் கோப்புக்கள் அழிக்கப்படுவதில்லை. மாறாக பென் டிரைவில் கோப்புக்கள் மறைத்து வைக்கப்படும் .அவ்வாறு மறைத்து வைக்கப்படும் கோப்புக்களை நீங்கள் இரண்டு வழிகளில் மறுபடி தோன்றச் செய்யலாம்.   



  வழிமுறை 1

( விண்டோஸ் 8   கணினியில்)  

முதல் பென் டிரைவை  கணினியில் சொருகுங்கள் .அடுத்து பைல் எக்ஸ்ப்லோர்ரைத் file Explorer  திறந்து கொள்ளுங்கள். திறக்கும் விண்டோவில் view டேபில் கிளிக் செய்யுங்கள். அங்கு show / hide பகுதியில் hidden item என்பதை தெரிவு நிலைக்குமாற்றுங்கள்.

(விண்டோஸ் 10 கணினியில்) 

start பட்டன்  மீது ரைட் கிளிக் செய்துவரும் மெனுவின் மூலம் Control panel லினுள் நுழையுங்கள். அங்கு Appearance and personalization  என்பதை தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் file Explorer options தெரிவுநிலைக்கு மாற்றுவதோடு hide protected operating system files  ( recommended ) என்பதை தெரிவு நிலையிலிருந்து நீக்கிவிட்டு ஓகே செய்து டயலொக் பொக்ஸை மூடிவிடுங்கள்.



வழிமுறை 2  

அடுத்து கமாண்ட் ப்ரொம்ப்டில் attrib-r -s -h *.* என . இதன் மூலம் பென்ட்ரைவிலுள்ள அனைத்து பைல்களினதும்  Read Only > Archive > system > hidden பண்புகள் அகற்றப்படும்.

Start" பட்டனில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Run  தெரிவு செய்யவரும் பெட்டியில் cmd என டைப் செய்து   Enter விசையை அழுத்துவதன் மூலம் கமாண்ட் ப்ரொம்ப்டுக்குள் நுழையுங்கள்.

அங்கு கீழே தரப்பட்டிருக்கும் கட்டளையை  டைப் செய்து எண்டர் செய்யுங்கள்.               Attrib- h -Read -s/ s/d g: \ *.* நீங்கள் மேலே உள்ள கட்டளையை நகலெடுத்து  ஒட்டவும் ( copy / paste ) முடியும்.   இங்கு   என்பது எனது கணினியில் பென் டிரைவிற்கு கொடுக்கப்படும் எழுத்தாகும்.
உங்கள் கணினியில் பென் டிரைவிற்குரிய எழுத்தை   g  குப் பதிலாக இடுங்கள். இப்போது உங்கள் பென் டரைவில் கோப்புகள் காண்பிக்கப்படுகிறதா என பாருங்கள்.


1 comment:

  1. என்னுடைய pen drive ல் சில file ல் name change ஆகி உள்ளது.. அந்த fileஐ open செய்ய முடியவில்லை

    ReplyDelete

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts