Thursday 7 February 2019

ASUS TUF கேம்மிங் FX505G LAPTOP சிறப்பம்சங்கள்

ASUS  TUF கேம்மிங் FX505G  LAPTOP சிறப்பம்சங்கள்

அசுஸ் நிறுவனம், TUF கேம்மிங் சீரிஸின் கீழ் ஒரு புதிய லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பம்சங்களைக் குறித்து கீழே காண்போம்.





மற்ற கேம்மிங் லேப்டாப்களைப் போல அதிக எடைக் கொண்டதாக இது இல்லை. இதன் முன்னோடியிடம் இருந்து சில வடிவமைப்பு அம்சங்களைப் பெற்றிருந்தாலும், தனக்கே உரிய சில வித்தியாசங்களைப் பெற்றுள்ளது. சாம்பல் நிற முழுமைப்படுத்தும் வடிவமைப்பை பெற்றுள்ளது. லிட் பகுதியில் அசஸ் லோகோ அமைந்து, ஆன் செய்யும் போது ஒளிர்கிறது.




வடிவமைப்பு


பல கேம்மிங் லேப்டாப்களுடன் ஒப்பிடும் போது, இது 2.15 கிலோ எடையுடன் சற்று மெல்லியதாக காணப்படுகிறது. எதிர்பாராத வகையில் சிந்தும் நீர்ம துளிகள் மற்றும் எளிய அழுத்தங்களை தாங்கக் கூடியது என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. பின்பக்கத்தில், 4 ரப்பர் ஸ்டாண்டுகளின் மூலம் இடைவெளியை கொண்டு காற்றோட்டத்திற்கு வழிவகை செய்யும் சில காற்று திறப்பிகள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த லேப்டாப்பின் வடிவமைப்பு கவர்ச்சிகரமாகவும் எடுத்து செல்ல எளிதாகவும் உள்ளது. வழக்கமான கேமிங் சாதனங்களில் இருந்து இதன் வடிவமைப்பு முற்றிலும் மாறுபட்டுள்ளது.




DISPLAY


இதன் TN பேனலுக்கு அதிகபட்ச வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த முறை IPS பேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 15.6 இன்ச் LED பேக்லிட் FHD டிஸ்ப்ளே பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. இதில் உள்ள 144Hz ரீஃபிரஷ் விகிதம், தடையின்றி இயக்கத்திற்கு உதவியாக உள்ளது.

இதன் டிஸ்ப்ளே சிறந்த கோணங்களின் காட்சிகளைக் கொண்டுள்ளது. எல்லா வெளிச்ச சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில், டிஸ்ப்ளேயின் ஒளிர்வு அமைந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே RGB கலர் நிலைகளை 100% அளிப்பதாக, தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. எங்கள் பயன்பாட்டு சோதனையில், கேம் ஆடிய போதும், படங்களைப் பார்த்த போதும் குறிப்பிடத்தக்க தெளிவை காண முடிந்தது.

TUF கேம்மிங் FX505 லேப்டாப்பில்எந்த ஒளிர்வு நிலையிலும் மங்காத ஒரு சிறந்த டிஸ்ப்ளேயை பெற்று, சிறந்த காட்சி அனுபவத்தை அளிக்கிறது. மேலும் இதன் கன்ஸ்டிராஸ்ட் விகிதமும் சிறப்பாக உள்ளது.





கீபோர்டு மற்றும் டிராக்பேட்


லேப்டாப்களில் நீங்கள் கேம் ஆட ஆரம்பித்துவிட்டால், சில தொந்தரவுகளை நீக்கும் வகையில் கீபோர்டு தேவைப்படுகிறது. இந்த லேப்டாப்பிலும், தீவிர ஆட்டத்தில் கிடைக்கும் விரல் தட்டுகளை வாங்குவதற்கு தயாரான ஒரு கடினமான கீபோர்டு அளிக்கப்பட்டுள்ளது. கீ அழுத்தம் அவ்வளவு சத்தமின்றி, திருப்திகரமான இயக்கத்தை அளிக்கிறது. 20 மில்லியன் வாழ்நாள் அழுத்தங்களை தாங்கும் வகையில் இந்த கீகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, அசஸ் நிறுவனம் கூறுகிறது.
இது ஒரு RGB பின்பக்க ஒளிர்வு கொண்ட கீபோர்டு ஆகும். 4 மண்டல ஒளிர்வு கொண்ட இதை, ப்ரீ-இன்ஸ்டால்டு AURA சாஃப்ட்வேர் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்தில் உள்ள WASD கீகள், அசஸ் ROG ஸ்ட்ரிக்ஸ் சீரிஸ் லேப்டாப்களில் உள்ளதை ஒத்துள்ளது.
இந்த லேப்டாப்களில் உள்ள எலன் பிளாஸ்டிக் டிராக்பேட், விண்டோஸ் பிரிஸிசன் டிரைவர்களை ஆதரிக்கின்றன. ஆனால் அதை லேப்டாப்களுக்கான சிறந்த டிராக்பேக் என்று நாங்கள் குறிப்பிட முடியாது.




செயல்பாட்டு திறன்

இந்த லேப்டாப் மூலம் கிராஃபிக்ஸ் கொண்ட கேம்களை தங்குதடையின்றி ஆட முடிகிறது. நாங்கள் சோதித்து பார்த்த உயர்தர மாடலில் ஒரு 6 கோர் இன்டல் கோர் i7-8750H செயலியைக் கொண்டு, 16GB RAM மற்றும் NVIDIA ஜிஃபோர்ஸ் GTX 1060 Ti 4GB GPU-யை பின்துணையாக கொண்டுள்ளது.
பல கேம்களை நாம் தொடர்ச்சியாக ஆடி முடித்த நிலையில், விரைவில் லேப்டாப்பை குளிர்விக்கும் வகையில், இதன் கூலிங் அமைப்பு சிறப்பாக உள்ளது. இதில் மாசு எதிர் கூலிங் (ADC) கொண்ட இரட்டை பேன்கள் உடன் ஓவர்பூஸ்ட் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இதனால் கேம்கள் ஆடுவது மிகவும் இனிமையாக உள்ளது.
எல்லா பகுதிகளில் சிறந்து விளங்கும் இந்த சாதனம், ஆடியோ பகுதியில் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. தரம் குறைந்த ஸ்பீக்கர்களை பயன்படுத்துவதால், அவ்வளவு சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிக்க தவறுகிறது.
மேலும் இந்த லேப்டாப்பில் 48Wh பேட்டரி மட்டுமே காணப்படுவதால், முழு சார்ஜ் செய்த பிறகும் நான்கு மணிநேரம் மட்டுமே தாக்குபிடிக்கிறது. முழு சார்ஜ் ஆக, ஏறக்குறைய 2 மணிநேரங்களை எடுத்து கொள்கிறது.




முடிவு

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, TUF FX505G ஒரு சிறந்த சாதனம் என்பதோடு, ஒரு நல்ல கேம்மிங் சாதனமாக எல்லா வசதிகளையும் அளிக்கிறது. அட்டகாசமான டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த இன்னார்டுகளை கொண்டு, துவக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இதன் விலை ரூ.1,29,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப் மூலம் அன்றாட பணிகளை செய்ய முடிவதோடு, எல்லா கிராஃபிக்ஸ் திறன் கொண்ட கேம்களையும் ஆட முடிகிறது. இவ்வளவு செலவு செய்ய நீங்கள் விரும்பாத பட்சத்தில், ஐ5 வகையைச் சேர்ந்த லேப்டாப்பை வாங்கி, பணத்தை மிச்சப்படுத்த முடியும்.




No comments:

Post a Comment

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts