கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சவால்விடும் போர்ட்நைட்! பின்வாங்காத சுந்தர்பிச்சை...
கூகுள் நிறுவனம் அதன் ஆப் ஸ்டோர் தொடர்பான பொருளாதார கொள்கைகளில் ஏற்கனவே உள்ள வழியை பின்தொடரவுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஆப் சேல்ஸ் மற்றும் ஆப் பர்சேஸ் வருவாயில் டெவலப்பர்களுடன் தற்போதுள்ள 30% வருமான பகிர்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை என Google CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
"அதில் மதிப்பு பரிமாற்றம் இருக்கிறது என நினைக்கிறேன் மற்றும் அது இன்டஸ்ட்ரி ஸ்டேன்டேர்டில் தான் இருக்கிறது," என கூகுள் ப்ளே கட்டணம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பிச்சை கூறினார். ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் அதன் ஆப் டெவலப்பர்களோடு 70/30 என்ற அளவிலேதான் வருவாய் பகிர்வு உள்ளது.

வருவாய் பகிர்வு
குறிப்பாக ஆண்ராய்டில், ஆப் ஸ்டோர்கள் மற்றும் வருவாய் பகிர்வு போன்றவற்றை தவிர்ப்பதற்காக டெவலப்பர்கள் பல்வேறு மாற்று வழிகளை கண்டுபிடித்துவருவதை எவ்வாறு கூகுள் நிறுவனம் கையாளப்போகிறது என்ற வால்ஸ்ட்ரீட் ஆய்வாளர்களின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் சுந்தர் பிச்சை.

டெவலப்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறவில்லை
அந்த ஆய்வாளர்கள் டெவலப்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறவில்லை எனினும், அவற்றில் முக்கிய நிறுவனமான 'எபிக் கேம்ஸ்', கடந்த ஆண்டு தனது போர்ட்நைட் கேமை ஆண்ராய்டில் வெளியிடும்போது கூகுள் ப்ளே ஸ்டோரை தவிர்த்துள்ளது. அதற்கு பதிலாக கேமை நேரிடையாக பயனர்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் , அந்நிறுவனம் கூகுளுக்கு 30% வருவாய் பகிர்வை வழங்க தேவையில்லை.

50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு
'போர்ட்நைட்' கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத காரணத்தால், கூகுள் நிறுவனத்திற்கு 50 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பீடு செய்துள்ள ஆய்வாளர்கள், எபிக்ஸ் நிறுவனத்தை அனைத்து டெவலப்பர்களும் பின்தொடர்ந்தால் கூகுள் நிறுவனத்தின் நிலை மோசமடையும் என கூறியுள்ளனர்.

"30% ஸ்டோர் வரி
'30% ஸ்டோர் வரி என்பது உலகிலேயே மிகவும் அதிகமான ஒன்று. அதேநேரம் கேம் டெவலப்பர்கள் கேமை உருவாக்க, செயல்படுத்த மற்றும் அதை தொடர்த்து பராமரிக்க ஏற்படும் செலவுகளை அந்த 70%ல் அடக்க வேண்டியுள்ளது' என்கிறார் எபிக் கேம்ஸ் சிஈஓ மற்றும் நிறுவனருமான டிம் ஸ்வீனி.

30% கட்டணம்
'ஓபன் ப்ளாட்பார்ம்களில், இந்த ஸ்டோர்ஸ் வழங்கும் பண பரிமாற்றம், டவுன்லோட் பேண்ட்வித் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் போன்ற சேவைகளுக்கு 30% கட்டணம் என்பது முற்றிலும் பொறுத்தமற்றது' என்கிறார் டிம்.
ஆனால் சுந்தர் பிச்சையின் கருத்து இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. ஆண்ராய்டு ஆப் டெவலப்பர்களுக்கு கூகுள் ப்ளே வழங்கும் சேவைகளுக்கு 30% கட்டணம் என்பது மிகவும் சரியானது என கூகுள் நிறுவனம் கருதுகிறது.

சந்தை செல்லும் பாதையிலும் செல்லுவோம்
எபிக்கேம்ஸ் நிறுவனம் ஆண்ராய்டில் மட்டும் பரபரப்பை கிளப்பவில்லை. கடந்த டிசம்பர் மாதம், போர்ட்நைட்-ஐ உருவாக்கியவர்கள் தங்களது சொந்த எபிக்கேம் ஸ்டோரை உருவாக்கியுள்ளர். மற்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக 30% கட்டணம் வசூலித்துவரும் நிலையில் இந்த நிறுவனம்12% மட்டுமே வருமான பகிர்வு எடுத்துக்கொள்கிறது. ஆனால் இந்த எபிக் கேம் ஸ்டோர் கணிணியில் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஏராளாமான கேம் டெவலப்பர்களின் ஆதரவை பெற்றுவிட்டது.
'நாங்கள் தொடர்ந்து இதே பாதையில் பயணிப்போம். ஆனால் நிச்சயமாக சந்தை செல்லும் பாதையிலும் செல்லுவோம்' என கூகுள் நிறுவனத்தின் தற்போதையை கட்டண பட்டியல் பற்றி கருத்துதெரிவித்துள்ளார். Google CEO சுந்தர்பிச்சை.
No comments:
Post a Comment