Sunday, 21 July 2019

FaceApp மூலம் தகவல்கள் திருடப்படும் அபாயம்.

FaceApp மூலம் தகவல்கள் திருடப்படும் அபாயம்.

சமூக இணையத்தளங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள (faceApp) என்ற செயலி மோகத்தின் காரணமாக அதனை பயன்படுத்துவோரின் தரவுகள் காணாமல் ஆக்கப்படுவதாக தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.



சமீபத்தில் இணையத்தளங்களில் ( Age challenge )என்பது காட்டுத்தீ போல் பரவி வருவதுடன் ஒவ்வொருவரும் இதற்குள் உள்வாங்கப்படுகின்றனர்.
இந்த செயலி பலரையும் கவர்ந்திருப்பதை அடுத்து இதனை பயன்படுத்துவோரின் இரகசிய தரவுகளை பாதுகாத்து பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தன்மையை உறுதிசெய்வதற்கு செயலியை தயாரித்தவர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?என்பது தொடர்பில் புதிய கேள்வி எழுந்திருப்பதாக தகவல் தொழில் நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


விசேடமாக உங்களது கையடக்க தொலைபேசியில் உள்ள அனைத்து புகைப்படஙகளையும் இந்த செயலியை தயாரித்த நபரிடம் தரவேற்றம் செய்வது தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி தொடர்பாக பிரச்சினைகள் அனைத்தும் ஏற்பட்டமை இதனை தயாரிப்பதில் ஈடுபட்ட நபரைப் போன்று இதனை பயன்படுத்த வேண்டாம் என டுவிட்டர் செய்தியினூடாக டுவிட்டர் பயனாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே ஆகும். இதனை தயாரித்த சிலர் தனிப்பட்ட கொள்கைகளுக்கு அப்பால் இதனை பயன்படுத்தும் பயனாளிகளினால் தரவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது தொடர்பான தகவலை குறிப்பிடுவதற்கும் தவறியுள்ளதாக தகவல் தொழில் நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக உங்களுடைய தனிப்பட்ட தன்மையை பாதுகாப்பதற்கு இவ்வாறான  செயலியின் அலையை பயனுபடுத்த வேண்டாம் என்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.


Monday, 15 July 2019

என்ன இந்த CAPTCHA ?

என்ன இந்த  CAPTCHA ?

இணைய தளங்களைப் பார்வையிடும் போது நாம் அடிக்கடி காணும் விடயங்களில் கேப்ச்சா Captcha  சாதனையும் அடங்கும்.
ஒரு ஒன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும் போதோ அல்லது ஒரு படிவத்தை நிரப்பும் போதோ captacha  (world verification; ) சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று பலரும் அறிந்திருப்பதில்லை.



கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது தரவு உள்ளீடு செய்வது தானியங்கி கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்ய பயன்படும் ஒரு செய்நிரலாகும். கேப்ச்சா சோதனைகளில் படமொன்றைக் ( image )  காண்பித்து அதிலுள்ள எழுத்துக்களை உள்ளீடு செய்யுமாறு பயனர் கேட்கப்படுகிறார்.

அப்படத்தில் காண்பிக்கப்படும் CAPTACHA Code எனும் ஆங்கில எழுத்துக்கள் வழமையான வடிவத்தில் இல்லாமல் சிதைத்த வடிவில்  (distorted text ) காணப்படும்.   எழுத்துக்கள் சரியாகவும் அலைவடிவிலும் இருக்கும்.
சிலவேளை எழுத்துக்களூடாக கோடுகளும் செல்வதை காணலாம். இவ்வாறான எழுத்துக்களை மனிதக் கண்களால் மட்டுமே கண்டறிய முடியும். என்பதுடன் ஒரு தானியங்கி கணினி செய்நிரலால் (bot) அவற்றைக் கண்டறிவது சாத்தியமற்றது. சில கேப்ட்ச்சாக்கள் மனிதர்களால் கூட அடையாளம் காண முடியாத படி சிதைந்து இருக்கும் .



அதிஷ்டவசமாக சில கேப்ட்ச்சா சோதனைகளில் எழுத்துக்களை கண்டறிய மிகவும் கடினமாக இருந்தால் மீண்டும் வேறொரு படத்தை உருவாக்க சில தளங்கள் பயனரை அனுமதிக்கின்றன. சிலவற்றில் செவிவழி உச்சரிப்பு (audio captacha ) அம்சமும் அடங்கும்.  கேப்ட்சா மூலம்  போட்ஸ் bots எனப்படும் சிறிய தானியங்கி நிரல்களால் ஒன்லைனில் படிவங்களை நிரப்புவதைத் தடுக்கப்படுவதோடு வலைத்தள படிவங்கள் மூலம் ஸ்பேம் போன்ற தேவயற்ற குப்பை அஞ்சல்கள் அனுப்பப்படுவது தடுக்கப்படுகிறது. 

சில இணையத்தளங்களில் பயனந்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை தடுக்கும் நோக்கிலும் கேப்ட்ச்சாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் AI ( Artificial  intelligence )எனும் செயற்கை நுண்ணறிவு மற்ற எழுத்து வடிவங்களைக் கண்டறியும் OCR (Optical  Character Recognition ) தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இப்போது இந்த கேப்ட்ச்சாக்களைக் கண்டறிவதும் bots  எனும் செய்நிரல்களுக்கு கடினமான செயலாக தெரிவதில்லை.



இதன் காரணமாக கேப்ச்சா தொழில் நுட்பத்திலும் பல்வேறு மேம்பட்ட உத்திகளைக் கையாள்கிறார்கள். சில படங்களை காண்பித்து அப் படங்கள் சார்ந்த ஒரு கேள்வியை பயனரிடம் கேட்பதும் அவற்றில் ஓர் உக்தியாகும்.
கூகுள் நிறுவனமும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கேப்ச்சா தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியது."நோ  கேப்ட்சா ரீகேப்ட்ச்சா"
NO CAPTACHA reCAPTACHA எனும் பெயர் கொண்ட இத்தொழில் நுட்பம் கேப்ட்சா சவால்களை மேலும் எளிதாக்கியுள்ளது. இங்கு படங்கள்,  எழுத்துருக்கள் மற்றும் ஓடியோ எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக பயனரின் சுட்டி (Mouse ) நகரும் முறையில் கவனம் செலுத்தப்படுகிறது. 



கேப்ட்சாக்கள் பயனருக்கு சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் தானியங்கு நிரல்களைத் தடுப்பதன் மூலம் இணையத்தளங்களை நிர்வகிக்கும் வெப்மாஸ்டர்  எனப்படுவோருக்கு மிகுந்த பயனை அளிக்கின்றன.
தானியங்கி செய்நிரல் மூலம் சுட்டியை நகர்த்தும் போது அது சீராக நேர்கோட்டிலேயே நகரும். எனினும் நாம் அதனை நகர்த்தும் போது ஒழுங்கற்ற முறையிலேயே  நகரும் என்பது நீங்கள் அறிந்ததே .
இங்கு சுட்டி நகரும் விதத்தை அவதானித்து சுட்டியை இயக்குவது தானியங்கி செய்நிரலலா இல்லை மனிதரா என்பது கேப்ட்சாவினால் தீர்மானிக்கப்படுகிறது.

Saturday, 13 July 2019

வட்ஸ்அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் வசதி!

வட்ஸ்அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் வசதி!



அதிகமானவர்களால் உவகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வரும் மெசென்ஜர் அப்ளிகேசனாக வாட்ஸ்அப் காணப்படுகிறது.
அதைப்போன்றே போலியான தகவல்கள் கலவரங்களை தூண்டக்கூடிய தகவல்கள் போன்றவையும் இந்த அப்ளிக்கேஷன் மூலமாகவே அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றன.

எனவே இதனை தடுப்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் மாத்திரமின்றி இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக வட்ஸ்அப்பில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்வதன் மூலமாக இப்பிரச்சினைக்கு   தீர்வு காண முடியும் என இந்திய அரசு நம்புகின்றது. அதாவது  ஃபிங்கர் பிரிண்ட் எனப்படும் புதிய வசதியினை புகுத்துவதன் மூலம் போலி தகவல்களை பரப்புபவர்களை மிக எளிதாக இனங்காண முடியும் என்று நம்புகின்றது.



இதன்படி  ஒவ்வொரு பயனாளரும்  ஃபிங்கர் பிரிண்ட் பயன்படுத்தியே தனது வட்ஸ்அப்பினுள் உள்நுழைய  வேண்டும். அப்போது ஃபிங்கர் பிரிண்டிற்கு உரியவர்களின் தகவல்கள் வட்ஸ்அப் நிறுவனத்தினரிடம் சேகரிக்கப்பட்டு விடும்.

இந்த நிலையில் போலி தகவல்களை பரப்பும் பயனாளர்கள் பேக் ஐடி யில் இருந்தாலும் அவருடைய ஐடியை கொடுத்து ஃபிங்கர் பிரிண்ட் மூலமாக உண்மையான விபரங்களை திரட்ட முடியும்.
இருந்த போதிலும் இந்த வசதியை பெரும்பாலான பயனாளர்கள் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Friday, 12 July 2019

5G ஸ்மார்ட் போனை VIVO அறிமுகம் செய்கிறது.

5G ஸ்மார்ட் போனை விவோ அறிமுகம் செய்கிறது.



    தற்போது விவோ நிறுவனமானது தனது 5ஜி ஸ்மார்ட் போனின் வெளியீட்டு விபரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவானது (MWC2019) சாங்காய் நகரில் 2019 ஜூன் மாத கடைசியில் 26 திகதி முதல் 29 திகதி வரை நடைபெறவிருக்கின்றது.  இந்த விழாவில் தான் விவோ தனது முதல் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இத்துடன் விவோ அபெக்ஸ் 2019 கான்செப்ட் போனும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. விவோவின் அபெக்ஸ் 2019 கான்செப்ட் போன் நாட்ச் , பஞ்ச் ஹோல் போன்ற வடிவமைப்பு இல்லாமல் புல்ஸ்கிரீன் டிஸ்பிளே அம்சத்தை கொண்டிருக்கின்றது.



புகைப்படங்களை துல்லியமாக எடுக்க பின்புறம் டுயல் கெமரா பொருத்தப்படவுள்ளது.
மற்ற சிறப்பம்சங்களை பொறுத்தமட்டில் அபெக்ஸ் 2019 மொடலில் 5ஜி சப்போர்ட் வழங்கப்பட்டுகின்றது.
இதற்கென குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப் டிராகன் எக்ஸ் 50ஜி மொடல் வழங்கப்படுகின்றது. இத்துடன் ஸ்னாப் டிராகன் 855 பிராசசர் 256 ஜிபி மெமரி ,12 ஜிபி ராம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த சாதனத்தில் 4000 எம்எஎச்  பற்றரியை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும்  ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பற்றரியில் 2.38 சதவீத சார்ஜ் செய்ய 14 நொடிகளே ஆகும் என்றும் செல்லப்பட்டுள்ளது.

Thursday, 11 July 2019

GPS



பூகோள நிலைப்படுத்தல் முறைமை எனப்படும் ஜிபிஎஸ் (GPS) எமக்கு இலவசமாக கிடைத்தாலும் இதனை இயக்குவதற்கு ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது. இதற்கான நிதியானது அமெரிக்க வரியினால் பெறப்படுகிறது.

Tuesday, 9 July 2019

30 இலட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்

30 இலட்சம் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக்



இந் நிலையில் பேஸ்புக்கில் போலிக் கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதில் 30 லட்சம் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கியுள்ளதாகவும் இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலிக் கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.  அதில் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும் , விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் , இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Monday, 8 July 2019

கூகுள் கலண்டரில் Dark Mode வசதி

கூகுள் கலண்டரில் Dark Mode வசதி

பயனர்களின் கண் பார்வைக்கு சௌகரியமாக  இருக்கக்கூடிய வகையில் பல செயலிகள் மறறும் இணையத்தளங்களில் Dark mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.  கூகுள் நிறுவனமும் தனது சில செயலிகளிலும் , குரோம் உலாவியிலும் இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.   இதன் தொடர்ச்சியாக தற்போது கூகுள் கலண்டர் செயலிலும் குறித்த Dark mode  வசதியினை தற்போது வழங்கியுள்ளது.  இதனை செயற்படுத்துவதற்கு கலண்டர் அப்ளிக்கேஷனை திறந்து settings பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் General Theme எனும் பகுதியில் தரப்பட்டுள்ள Dark mode இனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது  Dark mode வசதி செயற்பட ஆரம்பித்து விடும். மீண்டும் தேவைப்படின் இதே படிமுறையில் Light mode வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

மீண்டும் நெருக்கடியில் ஹுவாவி

மீண்டும் நெருக்கடியில் ஹுவாவி


அமெரிக்கா,  சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார போட்டி காரணமாக ஹுவாவி நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு  அமெரிக்கா தடை விதுத்துள்மை தெரிந்ததே.  இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது.   இப்படி இருக்கையில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.    அதாவது ஹுவாவி நிறுவனத்தின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கு ஜப்பான் மற்றும் பிரித்தானியா என்பன தடைவிதித்துள்ளன .  எனவே அந்  நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள 5G தொழில்நுட்பத்தினைக்  கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படாது என தெரிகிறது.

Saturday, 6 July 2019

விற்பனைக்கு வந்து விட்டது 1TB microSD கார்ட்

விற்பனைக்கு வந்து விட்டது   1TB  microSD கார்ட்


ஸ்மார்ட் கைப்பேசிகள் டேப்லட்கள் மற்றும் கமெராக்கள் என்பவற்றில் பயன்படுத்தக் கூடிய microSD கார்ட்களை வடிவமைக்கும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக SanDisk  விளங்குகின்றது. இந்த நிறுவனம் தற்போது  1TB கொள்ளளவுடைய microSD கார்ட்டினை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளது. 
 இதனை அமேசான் தளத்தின் ஊடாக கொள்வனவு  செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. எனினும் தற்போது ஸ்பெயின் , ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் உள்ளவர்களால் மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.    இதன் விலையானது 449.99 அமெரிக்க டொலர்கள் ஆகும். இதேவேளை இச் சாதனமானது 160MB /S எனும் வேகத்தில் தரவுகளை வாசிப்பதுடன் , 90MB /S எனும் வேகத்தில் தரவுகளை பதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  வேகத்தில் தரவுகளை பதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

What is Hacking?

HACKING   என்றால் என்ன ? இணைய உலகிலும் திருடர்கள் உள்ளனர் . இவர்களையே ஹேக்கர்கள் என்று அழைக்கின்றனர் . நிஜவுலகில் திருடர்கள...

Popular Posts